மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
2 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
2 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
தர்மபுரி: தர்மபுரி அருகே, நேற்று திருமணம் நடக்கவிருந்த மணப்பெண்ணை கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.தர்மபுரி அடுத்த கம்பைநல்லூர் கருவேலம்பட்டியை சேர்ந்தவர் நாகமணி (43). இவரது மகள் முத்துலட்சுமி (19) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று திருமணம் நடக்கவிருந்தது.இந்நிலையில், 9ம் தேதி இரவு 85 ஆயிரம் ரொக்கம், 19 பவுன் நகைகளுடன் முத்துலட்சுமி திடீரென காணவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் முத்துலட்சுமி கிடைக்காத நிலையில், நேற்று, நாகமணி கம்பைநல்லூர் போலீஸில் அளித்த புகாரில் தனது மகளுடன் படித்த கொண்டம்பட்டியை சேர்ந்த நேதாஜி என்பவர் நகை மற்றும் பணத்துடன் முத்துலட்சுமியை கடத்தி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவன் நேதாஜி மற்றும் முத்துலட்சுமியை தேடிவருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025