உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முத்திரையிடாத தராசு அதிரடி பறிமுதல்

முத்திரையிடாத தராசு அதிரடி பறிமுதல்

தர்மபுரி: தர்மபுரியில் தொழிலாளர் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் முத்திரையிடாத தராசு, எடைக்கற்கல் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி தொழிலாளர் ஆய்வாளர் முனியன் உத்தரவுப்படி தர்மபுரி தொழிலாளர் துணை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் குமுதவல்லி மற்றும் அலுவலக பணியாளர்கள் சுப்பிரமணி, நீலமேகம், ராமநாதன் ஆகியோர் தர்மபுரி உழவர் சந்தை, மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், தள்ளுவண்டி பழக்கடைகள், மட்டன், சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, முத்திரையிடாத மேசை தராசுகள் 28ம், மின் தராசுகள் 15, ÷டை தராசு ஒன்றும், இரும்பு எடைகற்கள் 51ம் தரமற்ற அளவைகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி