உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, நவ. 1-தீபாவளி பண்டிகையையொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோட்டிலுள்ள அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமன சுவாமி கோவில், வெளிபேட்டை தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், சந்தனுார் பால முருகன் கோவில், விருப்பாட்சிபுரம் சிவன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் தீபாவளியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன. இக்கோவில்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு, இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை