மொரப்பூர்: மொரப்பூர் ஸ்டேஷனில், திருவனந்தபுரம் ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு தாங்கள் தான் காரணம் என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் சொந்தம் கொண்டாடி வரு-கின்றனர்.சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரம் வரையி-லான எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12695, 12696) தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வழியாக தினமும் சென்று வருகிறது.இந்த ரயில், தர்மபுரி மாவட்டத்தில் எந்த ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தம் இல்லை. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவ-டிக்கை எடுக்க, நீண்ட நாட்களாக மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கம், வணிகர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ரயில்வே அமைச்சர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்-டது.3அதன்படி, சென்னை - திருவனந்தபுரம் இடையி-லான எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 2026 ஜன., 1 முதல், தினமும் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காலை, 5:30 மற்றும், இரவு, 7:05 மணிக்கு நின்று செல்ல, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வந்த தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பொது-மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, நிருபர்களிடம் கூறுகையில், ''ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, 2024 டிச., 3ல் சந்தித்து மனு கொடுத்ததால், தற்போது, சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரம் எக்ஸ்-பிரஸ் ரயில், வரும் ஜன., 1 முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்வதற்கு உத்-தரவிட்டுள்ளார்,'' என்றார்.இந்நிலையில், சென்னை சென்ட்ரல் -- திருவனந்-தபுரம் வரையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க, ரயில் பய-ணிகள் சார்பில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்-சரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழக-னிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தெரிவித்தார். அதன்-படி, சென்னை -- -திருவனந்தபுரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், நின்று செல்ல, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த, அக்., 30ல் தம்பிதுரை எம்.பி.,க்கு எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்-டுள்ளது.