உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரை அதிவேகமாக ஓட்டி தொடர் விபத்து ஏற்படுத்திய போதை வாலிபர் கைது

காரை அதிவேகமாக ஓட்டி தொடர் விபத்து ஏற்படுத்திய போதை வாலிபர் கைது

தர்மபுரி,தர்மபுரி டவுன் முதல், பாளையம் சுங்கச்சாவடி வரை, மதுபோதையில் காரை ஓட்டிசென்று தொடர் விபத்தை ஏற்படுத்திய வாலிபரை, தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி டவுன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:3-0 மணிக்கு காந்தி நகரில், ஹூண்டாய் ஐ20 காரில் வந்த நபர், டவுன் எஸ்.வி., சாலையில் பைக்கில் சென்றவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். அப்‍போது காரின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்தது. இருப்பினும், காரை நிறுத்தாமல், சாலையில் தீப்பொறி பறக்க, தர்மபுரி -- சேலம் நெடுஞ்சாலையில், 15 கி.மீ., துாரம் வரை அதிவேகமாக சென்றார். இதில், இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, பாளையம்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற பைக்குகள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். காரை ஓட்டி சென்ற நபரை, தர்மபுரி டவுன் போலீசார், அதியமான்கோட்டை போலீசார் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். கார் பாளையம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையின் இடது புறமிருந்த பள்ளத்தில் சிக்கியது. அப்போது, காரை விரட்டி சென்ற பொதுமக்கள் காரினுள் இருந்தவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை மீட்ட போலீசார், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டிச்சென்றது, தர்மபுரி டவுன் காந்தி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நந்தகுமார், 22, என்பதும், மது போதையில் இருந்ததும் தெரிந்தது. அவரை நேற்று காலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை