மேலும் செய்திகள்
மின்கசிவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
11-Jun-2025
அரூர், அரூர் பெரிய மண்டி தெருவை சேர்ந்தவர் விஜயா. இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மதியம், 12:00 மணிக்கு அவரது வீட்டில் மின்கசிவால் தீ பிடித்தது. அருகில் இருந்தவர்கள் விஜயாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, காற்றில் மளமளவென பரவிய தீ, கொளுந்து விட்டு எரிய துவங்கியது. விஜயா தகவலின் படி, சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீயில் வீட்டிலிருந்த ஷோபா, பிரிட்ஜ், டிவி, வாசிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jun-2025