உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது: அன்புமணி சொல்கிறார்!

சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது: அன்புமணி சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது என தர்மபுரியில் நிருபர்கள் சந்திப்பில் பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் பா.ம.க., வேட்பாளரும், மனைவியுமான சவுமியாவுக்கு ஆதரவாக அன்புமணி மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பா.ம.க., போராட்டத்தால் தான் தர்மபுரி மாவட்டம் வளர்ந்துள்ளது. அடையாள அரசியல் பா.ம.க.,விற்கு தெரியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.பா.ம.க., திடீரென பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தது போல் சிலர் பேசுகின்றனர். இதற்கு முன்பாக பல தேர்தல்களில் பா.ஜ., உடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.,பாமக கூட்டணி குறித்து பேசுவது வயிற்றெரிச்சல். சமூக நீதிக்காக திமுக, அதிமுக செய்தது என்ன?. ஸ்டாலினும், இ.பி.எஸ்.,ம் என்ன செய்தார்கள். பா.ம.க.,வால் தான் பழனிசாமி முதல்வராக தொடர்ந்தார். கூட்டணி என சொன்னதால் தான் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு இ.பி.எஸ்., ஒப்பு கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajah
ஏப் 03, 2024 18:50

விஜயகாந்த் ஒரு நாகரீகமற்றவர் இவருடன் கூட்டணி வைத்ததற்கு வருந்துகின்றேன் என்று ஜெயலலிதா அம்மையார் சொல்லியருந்தும் இன்று அம்மாவின் கட்டளையை மீறி கூட்டணி வைத்துள்ளார்கள்.அன்புமணி அவர்கள் சொல்வதில் தவறில்லை


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 03, 2024 16:39

இவருகிட்ட இருந்து தான் சமூகநீதியையே காப்பாத்தணும் இவரு என்னமோ சமூக நீதிக்கு பட்டா வாங்கி வச்சிருக்கிற மாதிரி பேசறாரு எல்லாம் கால கொடுமை


தமிழ்
ஏப் 03, 2024 15:40

மற்ற சாதியினரை எதிர்த்துக்கொண்டு உங்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்ததற்கு eps க்கு இன்னும் வேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை