உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாணியாறு அணையில் உபரிநீர் திறப்பு

வாணியாறு அணையில் உபரிநீர் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்துள்ளதால், அணை பாதுகாப்பு கருதி, நேற்று மாலை முதல், உபரி நீர் வெளியேற்றப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வாணியாறு அணை அமைந்துள்ளது. அணையில், 65.27 அடி தண்ணீர் தேக்கி வைக்கலாம். ஏற்காடு மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீரால் அணை நிரம்பி நேற்று அணையில், 63 அடியாக தண்ணீர் உயர்ந்தது. மேலும் தொடர் மழையால் அணைக்கு, 50 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு, 50 கன அடி நீரை, நேற்று தர்மபுரி மாவட்ட (நீர்வளம்) பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் மோகனா ஆகியோர் அணையிலிருந்து திறந்து வைத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'வாணியாறு அணையில் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ