உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி சாவு

மகேந்திரமங்கலம்: பாலக்கோடு அடுத்த, சூடப்பட்டியை சேர்ந்த விவசாயி சங்கர், 48. இவர் கடந்த, 6 அன்று தன் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில், மனைவி நந்தினியை அழைத்து சென்றார். இரவு, 9:00 மணிக்கு மாரண்டஹள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை சாலையில் சென்ற-போது, வெள்ளிச்சந்தையில் இருந்து மாரண்டஹள்ளி நோக்கி வந்த, மற்றொரு ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் அவர்கள் மோதி-யதில், தம்பதி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயமடைந்த நந்தினியை, மேல் சிகிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை