உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை விபத்தில் விவசாயி பலி

சாலை விபத்தில் விவசாயி பலி

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், 66, விவசாயி; இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தனக்கு சொந்தமான மாட்டை பிடித்துக் கொண்டு புழுதியூர் புதன் சந்தையில் விற்பதற்காக, மகன் முருகனுடன் நடந்து சென்றார். பேதாதம்பட்டி - கோபிநாதம்பட்டி கூட்ரோடு சாலையில், மாலகபாடி அருகே சென்றபோது பின்னால் பேதாதம்பட்டியை சேர்ந்த மற்றொரு தங்க ராஜ், 50, என்பவர் ஓட்டி வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டி தங்கராஜ் மீது மோதியது. இதில், தலையின் பின்பகுதியில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை