உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண் தற்கொலைக்கு காரணமான பஞ்., செயலருக்கு, 5 ஆண்டு சிறை

பெண் தற்கொலைக்கு காரணமான பஞ்., செயலருக்கு, 5 ஆண்டு சிறை

தர்மபுரி :பெண் தற்கொலைக்கு காரணமான பஞ்., செயலருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தர்மபுரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, நல்லகுட்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கமலேசன். அதே பகுதியை சேர்ந்த நல்லகுட்லஹள்ளி பஞ்., செயலர் கிருஷ்ணன், 49. இவர்கள் இருவருக்கும், நிலம் தொடர்பன வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், 2016- செப்., 22- அன்று கமலேசன் மனைவி தெய்வானையை பஞ்., செயலர் கிருஷ்ணன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். மேலும், வீட்டு தண்ணீர் இணைப்பை துண்டித்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த தெய்வானை, 2016- செப்., 23ல் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு விழுந்து, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு, தர்மபுரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அசீன்பானு நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் கல்பனா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி