மேலும் செய்திகள்
பலகாரத் தயாரிப்பாளருக்கு அறிவுரை
14-Oct-2025
பென்னாகரம், ஒகேனக்கல்லில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன் வறுவல் விற்பனையாளர்களுக்கான, சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம், மதிப்பு கூட்டிய மற்றும் உடன் உண்ணக்கூடிய மீன் உணவு பொருள்கள் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி கடந்த, சில தினங்களாக மீன்வள ஆய்வாளர் அலுவலக பயிற்சிக்கூட அரங்கில் நடந்து வருகிறது.பயிற்சியின் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நேற்று நடந்தது. பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பென்னாகரம் மீன்வள ஆய்வாளர் வேலுசாமி முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் தலைமை வகித்தனர். விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சியை, உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் இ.பி.இன்போவேஸ் பயிற்றுனர் காமேஸ்பால்ராஜ் வழங்கினார்.
14-Oct-2025