மேலும் செய்திகள்
5ம் தேதி முதல் வீட்டுக்கு ரேஷன் பொருள்
02-Oct-2025
கோவை மாவட்டத்தில் 250 ரேஷன் கடைகள் மூடல்
08-Oct-2025
தர்மபுரி, கூட்டுறவுத்துறை சார்பில், தீபாவளி -பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதிய திட்டத்திலுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச வேட்டி மற்றும் சேலையை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று வழங்கி, தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டத்தில், கூட்டுறவு துறையிலுள்ள, 475 முழுநேர ரேஷன் கடைகள், 571 பகுதிநேர ரேஷன் கடைகள் மற்றும், 10 மகளிர் சுய உதவி குழு நடத்தும் கடைகள் என, 1,056 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 4,75,713 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 58,626 பேர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு, 41,921 சேலைகள், 16,702 வேட்டிகள் வழங்கப்பட உள்ளன. ஏ.ஜெட்டிஹள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டிலுள்ள ஒட்டப்பட்டி ரேஷன் கடையில், 70 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலையை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில், தர்மபுரி, தி.மு.க., -- எம்.பி., மணி, டி.ஆர்.ஓ., கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மேலாளர் தணிகாசலம், ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
02-Oct-2025
08-Oct-2025