மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
2 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
2 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, பொங்கல் பண்டிகையால் நேற்று, 5,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்துார் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திலிருந்து ஆடுகளை விற்கவும், வாங்கவும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு, 6,000 முதல், 7,000 ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு, 8,000 முதல் 9,000 ரூபாய் வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு 12,000 முதல், 14,000 ரூபாய் வரையும் விற்பனையானது. வழக்கத்திற்கு மாறாக, பொங்கல் பண்டிகை எதிரொலியால், ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 5 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று ஆடுகளை வாங்க குவிந்த மக்களால், தர்மபுரி - திருப்பத்துார் சாலை மற்றும் வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாமல், அலட்சியம் காட்டியதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025