உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 41 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1983ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் முன்னிலையில் வகித்தனர். முன்னாள் மாணவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு, பள்ளி நாட்களில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் குழுவிற்கு 'பி.ஆர்.பி., குழு லெஜன்ட் அசோசியேஷன்' என பெயர் சூட்டி தலைவராக முருகன், துணைத்தலைவர்களாக அழகரசன், வேலுமணி, செயலாளராக சரவணன், கணேசன், பொருளாளராக நாகராஜன் தேர்ந்தெடுத்தனர். முன்னாள் மாணவர் குழுவினர், ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தொடர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை