உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பகுதியில் கனமழை

அரூர் பகுதியில் கனமழை

அரூர் : அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 8:30 முதல், நள்ளிரவு வரை வாச்சாத்தி, அச்சல்வாடி, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி, தீர்த்தமலை, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால், வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிட்லிங், அம்மாபேட்டை மற்றும் சூரநத்தம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி