உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஸ்வெட்டர், கம்பளி விற்பனை ஜோர்

ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஸ்வெட்டர், கம்பளி விற்பனை ஜோர்

ஓசூர்: ஓசூர் பகுதியில், கடும் பனிப்பொழிவு துவங்கியுள்ள நிலையில், ஸ்வெட்டர், கம்பளி விற்பனை ஜோராக நடந்து வருகிறது.தமிழக எல்லையான ஓசூர், கடல் மட்டத்தில் இருந்து, 2,883 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவ.,டிச., மாதங்களில் மற்ற பகுதிகளை காட்டிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக இரவு, அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்-ளது.பகல் நேரங்களில் வழக்கம் போல் வெயில் அடிக்கும் நிலையில், இரவில் குளிரின் தாக்கம் துவங்கி விடுகிறது. காலை நேரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை, 7:00 மணிக்கு மேலாகியும், பனி மூட்டமாக காணப்பட்-டதால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு-களை எரியவிட்டபடி சென்றனர். முன்னால் சென்ற வாகனங்-களை, அருகில் சென்ற பின் தான் பார்க்க முடிந்தது.பனி அதிகரித்துள்ளதால் காய்ச்சல், தலைவலி, சளி தொல்-லையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மக்கள் ஸ்வெட்டர் அணிந்து வருகின்றனர். அதனால், ஓசூர் பகுதியில் அதன் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரவில் கம்பளி போர்வைகளை வைத்து, குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பி வரு-கின்றனர். கடும் குளிர் துவங்கி விட்டதால், வட மாநில தொழி-லாளர்கள் ராயக்கோட்டை சாலை, தேசிய நெடுஞ்சாலையோரங்-களில், போர்வைகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை