உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நிழற்கூடம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

நிழற்கூடம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

நிழற்கூடம் அமைக்கும் பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்தர்மபுரி, அக். 11-தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கடகத்துார் பஞ்., பச்சினம்பட்டியில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மழை, வெயிலில் நின்று சிரமப்பட்டனர். இதனால், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரனிடம் பச்சினம்பட்டியில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, எல்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூட்டம் கட்ட நிதி ஒதுக்கி பணி நடந்தது. இப்பணியை நேற்று எம்.எல்.ஏ., பார்வையிட்டார். பணியை விரைந்து முடித்து பயணிகள் நிழற்கூடத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை