| ADDED : பிப் 28, 2024 02:37 AM
தர்மபுரி:தர்மபுரி
மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட
கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில், தமிழகம்
முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும், 20,000 இடைநிலை
ஆசிரியர்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். ஊதிய
முரண்பாட்டை களைய வேண்டும். தி.மு.க., அரசு அறிவித்த தேர்தல்
வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட
செயலாளர் சசிகுமார், பொருளாளர் பழனிசாமி, துணை செயலாளர்கள் ரஞ்சித்,
ராஜிவ்காந்தி, துணை தலைவர்கள் நாகராஜன், சத்தியமூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்கள் சிவமலர், அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.