உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மத்திய குழுவினர் ஆய்வு

ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மத்திய குழுவினர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம் பசுவாபுரம், தாதனுார், தென்கரைகோட்டை ஆகிய ஊராட்சிகளில், ஜல் ஜீவன் மிஷன் குறித்து, மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் பிரதீப் குமார் சர்மா தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா? குடிநீரின் தன்மை, மாதந்தோறும் குடிநீர் ஆய்வு செய்யப்படுகிறா என்பது உள்ளிட்ட விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதனையடுத்து குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் குழுவினர் விளக்கம் கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் தண்ணீரின் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு உள்ளிட்ட, 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வதாக தெரிவித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பி.டி.ஓ.,மீனா உள்ளிட்ட அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி