உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பார்க்கிங் பகுதியாக மாறிய கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட்

பார்க்கிங் பகுதியாக மாறிய கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, ஆனைக்கல் போன்ற பகுதி களுக்கு தினமும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்-கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்-றனர். வேலைக்கு செல்வோர் மற்றும் பிற தேவைக-ளுக்காக வெளியே செல்வோர், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில், தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்து செல்கின்-றனர். அதுவும் குறிப்பாக, பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் பகுதியில், வாகனங்களை நிறுத்தி செல்வதால், பஸ்களை நிறுத்த முடியாமல் ஆங்-காங்கு நிறுத்தப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் மொத்தம், 10க்கும் மேற்பட்ட கடைகள், கெலமங்-கலம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதன் முன், பயணிகள் நடந்து செல்லும் பகுதியை கூட ஆக்கிரமிப்பு செய்துள்-ளனர். அதனால் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் நடந்து செல்வ-தற்கு கூட முடியாத அளவிற்கு, ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், கடும் சிரமம் ஏற்படுகிறது.கெலமங்கலம் போலீசார், டவுன் பஞ்., நிர்வாகம் இணைந்து, பஸ் ஸ்டாண்டிற்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுத்தால் மட்டுமே, பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல முடியும். பயணிகள் இடையூறு இல்லாமல் நடந்து செல்ல முடியும். அதற்கு, உரிய நடவ-டிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ