உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிரைண்டர் கல்லை போட்டு பெண்ணை கொன்றவர் கைது

கிரைண்டர் கல்லை போட்டு பெண்ணை கொன்றவர் கைது

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே நிலத்தகராறில், பெண் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள், 55; தம்பதியருக்கு மூன்று மகன்கள். அனைவரும் வெளியூரில் கூலி வேலை செய்கின்றனர். மாதம்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சின்னராஜ் மகன் அருண்குமார், 27, என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது. மாதம்மாளின் நிலத்திலுள்ள பயிர்களை அழித்து அருண்குமார் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாதம்மாள் காரிமங்கலம் போலீசில் பலமுறை புகார் அளித்துள்ளார். இந்நிலையில், மாதம்மாள் வீட்டிற்கு நேற்று மாலை சென்ற அருண்குமார், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, கடப்பாரையால் அவர் வயிற்றில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்தவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டதில் சம்பவ இடத்திலேயே மாதம்மாள் பலியானார். தடுக்க வந்த மாதம்மாளின் மருமகள் ஆர்த்தி, 25, மீதும் அருண்குமார் தாக்குதல் நடத்தியதில், அவர் கை எலும்பு முறிந்தது. காரிமங்கலம் போலீசார், மாதம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஆர்த்தியை மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி