உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரில் ரூ.1.80 லட்சம் மதிப்பு குட்கா கடத்தியவர் கைது

காரில் ரூ.1.80 லட்சம் மதிப்பு குட்கா கடத்தியவர் கைது

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார் தொப்பூர் அருகே, கட்டமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டயோட்டோ இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 450 கிலோ எடை கொண்ட, 1.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த பிலால், 41, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி