உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியில், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 19ல் அம்மனுக்கு பூ போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தோரணம் மற்றும் முத்து பல்லக்கில் அம்மன் பவனி வருதல், ஊர் மற்றும் ஆற்று மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், அக்னி கரகம், பூவாட்டம், அலகு குத்துதல், பூந்தேர் உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை மாரியம்மனுக்கு கிடா வெட்டி, அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெண்கள் கோலாட்டம், தப்பாட்டம் ஆடி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை