உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

தர்மபுரி: பால் கொள்முதல் விலையை உயர்த்த, தமிழ்-நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், 7-வது மாநில மாநாடு, தர்மபுரி யில் நேற்று நடந்-தது. சங்க மாநில தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமசாமி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்த-லைவர் டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில், கால்நடைகளுக்கான தவிடு, பருத்திக்-கொட்டை, புண்ணாக்கு, பூசா உட்பட கலப்பு தீவ-னங்களின் விலை கடந்த சில ஆண்டுகளில் அதி-கரித்துள்ளது. எனவே, தமிழக அரசு பால் கொள்-முதல் விலையை உயர்த்த வேண்டும். இதில், பசும்பால் ஒரு லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி, 45 ரூபாய் எனவும், எருமை பால் ஒரு லிட்ட-ருக்கு, 16 ரூபாய் உயர்த்தி, 60 ரூபாய் என வழங்க வேண்டும். தமிழகத்தில், பால் தொழிலை பாதுகாக்க அரசு உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு, 10 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பாலுக்கான விலை குறைப்பு அறிவிப்பால், ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும். கால்நடைகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். குழந்தைகள், சத்துணவு திட்டத்தில் பால் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்-களில் உள்ள அனைத்து கால்நடைகளையும் இன்-சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.கறவை மாட்டுக்கடன், வட்டியில்லா பராமரிப்பு கடன், தாட்கோ கடன், மாட்டு கொட்டகை கடன் வழங்க வேண்டும்.கோமாரி நோய், அம்மை நோய், பாம்பு கடியில் இறக்கும் அனைத்து மாடுகளுக்கும், இழப்பீடு வழங்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ