முருகன் கோவில் நகை திருட்டு
முருகன் கோவில் நகை திருட்டுதொப்பூர், அக். 15-நல்லம்பள்ளி அருகே, கோவில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை பணம் திருட்டு குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, சாமிசெட்டிபட்டி மேல்வீதியை சேர்ந்த முருகேசன், 59. பையனஹள்ளி அரசு பள்ளி ஆசிரியர். இவர், சாமிசெட்டி பட்டி முருகன் கோவிலில் அருள்வாக்கு கூறி வருகிறார்.கோவிலுக்கு சொந்தமான வீட்டில், கோவில் நகைகள் மற்றும் பொருட்களை வைத்து, பாதுகாத்து வந்தார். கடந்த, 12 அன்று அந்த வீட்டை பூட்டி விட்டு, பக்கத்திலுள்ள தன் வீட்டிற்கு சென்றார். மறுநாள், 13 அன்று காலையில், கோவிலுக்கு சொந்தமான வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமி கழுத்தில் போடப்படும் ஒரு பவுன் செயின் மற்றும் ஆசிரியருக்கு சொந்தமான, 1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.முருகேசன் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.