உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நிகழ்ச்சி

தர்மபுரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நிகழ்ச்சி

தர்மபுரி:தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்ஸி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாசிர்இக்பால், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்