| ADDED : மார் 28, 2024 06:56 AM
தர்மபுரி : லோக்சபா தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள், தேர்தல் பொது பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என, தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி லோக்சபா தொகுதி, தேர்தல் பொது பார்வையாளராக அருணா ரஜோரியா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து, தேர்தல் பொது பார்வையாளரை, தர்மபுரி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை நேரில் சந்தித்து, பொதுமக்கள் புகார் தரலாம். மேலும், 93639 62216 என்ற மொபைல் எண்ணிலும், தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொது பார்வையாளரின் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள, தாசில்தார் ரேவதியை, 99943 90925 என்ற எண்ணிலும் மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.