உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் திறப்புபென்னாகரம், அக். 25- பென்னாகரம் பேரூராட்சியில் கடந்த, 2020 - 21ம் நிதியாண்டில் மூலதன மானிய திட்டத்தில், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட், பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2023 - 24ம் ஆண்டு, 6வது மானிய நிதிக்குழு மானிய திட்டத்தில், 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 வகுப்பறை கொண்ட கட்டடம், பென்னாகரம் போடூர் சாலையில் அம்ருத் 2.0 திட்டத்தில், 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்கா, உள்ளிட்ட பணிகளை, அமைச்சர்கள் நேரு மற்றும் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 2.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, வேளாண் பொருட்கள் வழங்குதல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் பேரூராட்சிகள் துறை இயக்குனர் கிரண் குராலா தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பென்னாகரம் ஜி.கே.மணி, தர்மபுரி வெங்கடேஷ்வரன், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், பழனியப்பன், தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை