மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
2 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
2 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி-பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜங்காலஹள்ளியை சேர்ந்தவர் அறிவழகன். இவர் மனைவி மினாட்சி, 31. அறிவழகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் கடந்த மாதம், 21ல் தகராறு ஏற்பட்டது. அறிவழகன் தாக்கியதில் மணிகண்டன் இறந்து விட்டார். அறிவழகன் அவரது உறவினர் மாயக்கண்ணன் ஆகியோரை பொம்மிடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ஊரில் இருக்க பயந்து கொண்டு, அறிவழகன் மனைவி மீனாட்சி, தன் தாய் வீடான திருவண்ணாமலைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் ஜங்காலஹள்ளிக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலுள்ள பீரோ, கட்டில், பிரிட்ஜ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, 23, சிவிதா, 32 என, 6 பெண்கள் உட்பட, 15 பேர் அத்துமீறி வீட்டில் நுழைந்து சேதப்படுத்தியது தெரியவந்தது. புகார் படி, 15 பேர் மீது, பொம்மிடி போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025