உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுவர் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வம்

சுவர் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வம்

அரூர் : தமிழகத்தில், ஒரே கட்டமாக, ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் வக்கீல் மணி, அ.தி.மு.க., சார்பில் மருத்துவர் அசோகன், பா.ம.க., சார்பில் சவுமியா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அச்சல்வாடி, வீரப்பநாயக்கன்பட்டி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை, அரூர் உள்ளிட்ட இடங்களில், தனியார் சுவர்களில், அ.தி.மு.க.,வினர் தங்கள் வேட்பாளர் பெயருடன், இரட்டை இலை சின்னம் வரைந்து, தேர்தல் விளம்பரம் செய்துள்ளனர். இவர்களுக்கு போட்டியாக, தி.மு.க.,வினரும் உதயசூரியன் சின்னம் வரைந்து, சுவர் விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ