ரூ.1.39 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட பூஜை
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்கு மூலதன மேம்பாட்டு நிதியில் இருந்து, 1.39 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலக கட்டடம் கட்ட பூமி பூஜை, பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். பாலக்கோடு பேரூாட்சி அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கடந்த அக்., 24 அன்று அரூரில் நடந்த அரசு விழாவில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, நேற்று பூமி பூஜை நடந்தது.