மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
தர்மபுரி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், 'மாபெரும் தமிழ்க்கனவு' தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். இதில் தமிழ் பெருமிதம் குறித்து கேள்வி-பதில் நேரத்தில் சிறப்பாக கேள்வி எழுப்பிய கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை, கலெக்டர் சதீஸ் வழங்கினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கவிதா, சொற்பொழிவாளர் அறிவுமதி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில்களுக்கான வங்கிக் கடன்கள், சுய தொழில் தொடங்குதல் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை கலெக்டர் சதீஸ் மற்றும் மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.