பாலக்கோடு: பாலக்கோடு அருகே, 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் உட்பட, 110 பேர் படுகாயம் அடைந்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலிருந்து நேற்று மாலை, 6:00 மணிக்கு எஸ்.ஆர்.எஸ்., என்ற தனியார் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாரண்டஹள்ளிக்கு சென்றது. அதே போன்று, வெள்ளிச்சந்தையில் இருந்து, பாலக்கோடுக்கு, ராமஜெயம் என்ற தனியார் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்தது. பாலக்-கோடு சுகர் மில் அடுத்த பாரதி நகர் அருகே, சாலையின் குறுக்கே ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க எஸ்.ஆர்.எஸ்., பஸ் டிரைவர் தங்கராஜ், 46, பஸ்சை திருப்பியதில், எதிரே வந்த ராமஜெயம் பஸ் மீது மோதியது.இந்த விபத்தில், இரு பஸ்களிலும் டிரைவர்கள், பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என, 110 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அப்பகுதியினர் மற்றும் பாலக்கோடு போலீசார் மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் பாலக்-கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பாலக்-கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், பாலக்கோடு டவுன் பஞ்., சேர்மன் முரளி சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க, டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.படுகாயமடைந்த ராமஜெயம் பஸ் டிரைவர் ஜமீர், 30, தண்டுகா-ரணஹள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர் அன்பரசு, 15, லோகேஸ்-வரி, 17, மாதம்பட்டியை சேர்ந்த தீபிகா, 14, சுஜிதா, 16, கோடி-யூரை சேர்ந்த மேகலா, 17 உட்பட, 20 க்கும் மேற்பட்டோர், தர்ம-புரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்-சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை, தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தி.மு.க., - எம்.பி., மணி சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்-டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க, டாக்டர்களை கேட்டுக் கொண்டனர்.