| ADDED : மே 20, 2024 02:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குட்டப்பநாயக்கனுாரை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர், தர்மபுரி கூட்டுறவு வங்கி வட்டார மேற்பார்வையாளர். இவரது மகன் சந்தானபாண்டியன், 24. சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது தாய் பூங்கொடி, 48. நேற்று முன்தினம் மாலை சந்தான பாண்டியன், தாயை அழைத்து கொண்டு பைக்கில், பர்கூர் அடுத்த தபால் மேடு பகுதியிலுள்ள சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பினார்.பர்கூர் அருகே பையனுாரில், இவர்களை முந்திக்கொண்டு அதிவேகமாக சென்ற தனியார் கல்லுாரி பஸ், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பூங்கொடிக்கு இடுப்பு எலும்பு உடைந்தது, சந்தானபாண்டியனுக்கு கை, கால், முகம் என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர். பஸ் மோதிவிட்டு நிற்காமல் சென்ற, 'சிசிடிவி' காட்சி வைரலாகி வருகிறது.