ரேஷன் கடை கட்டடம் திறப்பு
அரூர்:அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,க்கு உட்பட்ட ஏ.கே.தண்டாவில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், அ.தி.மு.க., ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு, மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பரிமளா அன்பழகன், துணைத் தலைவர் வெங்கட்ராமன், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.