உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிவப்பு புல் எறும்பால் பாக்கு தென்னை பாதிப்பு: விஞ்ஞானிகள் ஆய்வு

சிவப்பு புல் எறும்பால் பாக்கு தென்னை பாதிப்பு: விஞ்ஞானிகள் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம், முள்ளிகாடு மற்றும் வாணியாறு அணை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபடியான விவசாயிகள் பாக்கு மற்றும் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இதில் சிவப்பு புல் எறும்புகளால் பாக்கு, தென்னை பாதிக்கப்படுகிறது. விவசாய நிலம் முழுதும் பரவியுள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர்.இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத் தோட்டக்கலைத் துறையினர் மற்றும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் கோவிந்தன், சசிகுமார் , தெய்வமணி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் நவீனா, உதவி தோட்டக்கலை அலுவலர் தண்டாயுதம் உள்ளிட்டோர், விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்தனர், அப்போது, பொதுமக்களிடமும் சிவப்பு புல் எறும்பு பாதிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். விஞ்ஞானிகள், சிவப்பு புல் எறும்புகளை கட்டுபடுத்த நிலத்திற்கு என்ன விதமான வேதிப்பொருள் பயன்படுத்தவேண்டும் என விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை