உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 10 பவுன் திருட்டு

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 10 பவுன் திருட்டு

தர்மபுரி தர்மபுரியில், ஓட்டல் உரிமையாளரின் வீட்டில், 10 பவுன் மற்றும் 15 லட்சம் ரூபாய், திருடு போய் உள்ளது. தர்மபுரி டவுன், கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ரதிபிரியா, 35. இவர். தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கணவர் செந்தாமரை, நரசையர் குளம் அருகே, பைக் கன்சல்டன்சி தொழில் செய்து வருகிறார். செந்தாமரையின் வீட்டில், அவரது அக்கா மகன் சந்துரு, 24, என்பவர் தங்கியிருந்தார். கடந்த, 20 அன்று கடைக்கு சென்று விட்டு, இரவு, 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு, சாவி ஜன்னல் மேல் இருந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அலமாரியில் வைத்திருந்த, 15 லட்சம் ரூபாய் மற்றும், 10 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. அன்று மதியம், 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்த சந்துரு தான் எடுத்து சென்றுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரதிபிரியா புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை