உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மருந்து குடோனில் ரூ.60,000 திருட்டு

மருந்து குடோனில் ரூ.60,000 திருட்டு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிருந்தாவன் நகரில் பீமாரெட்டி, 38, என்பவருக்கு சொந்தமான அலோபதி மருந்து மொத்த விற்பனை குடோன் உள்ளது. நேற்று காலை குடோனை திறக்க ஊழியர்கள் வந்தபோது குடோன் திறந்திருந்தது. ஊழியர்கள் தகவலின் படி, பீமாரெட்டி வந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த, 60,000 ரூபாய் மற்றும் 2 மொபைல் போன்கள் திருட்டு போயிருந்தன. மருந்து பொருட்கள் சிதறி கிடந்தன.குடோனுக்கு வெளியே இருந்த, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, போர்வையால் உடலை மூடிக்கொண்டு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே வந்த மர்ம நபர், ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முயன்றது தெரிந்தது. அங்கு சாவி இருப்பதை பார்த்து, அதை எடுத்து, குடோனை திறந்து உள்ளே புகுந்தவர், மொபைல்போன்கள் மற்றும் 60,000 ரூபாயை திருடிக்கொண்டு, சாவியை குடோன் பின்புறம் வீசிச்சென்றார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை