உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாயமேற்றிய பட்டாணி விற்பனை கடைக்கு ரூ.2,000 அபராதம்

சாயமேற்றிய பட்டாணி விற்பனை கடைக்கு ரூ.2,000 அபராதம்

தர்மபுரி, தர்மபுரி டவுனில் உள்ள உழவர் சந்தை மற்றும் ஒரு சில காய்கறி கடைகளில், பச்சை பட்டாணி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, வரத்து குறைவால், பச்சை பட்டாணி விலை உயர்ந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, ஒரு சிலர் லாப நோக்குடன் மளிகை கடைகளில் இருந்து உலர்ந்த பட்டாணியை வாங்கி, அதை செயற்கை நிறம் கலந்த நீரில் ஊற வைத்து, சிறு சிறு பொட்டலங்களாக கட்டி, பச்சை பட்டாணி என விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து, உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் மற்றும் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி டவுன் சந்தைபேட்டையில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அப்போது, செயற்கை நிறம் ஊற்றப்பட்ட நீரில், 3 கிலோ அளவிலான பட்டாணியை ஊறவைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தபட்ட கடைக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி