உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பட்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி டி.ஆர்.ஓ., கவிதா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில், பெரும்பாலான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர். இதில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, தாசில்தார் பெருமாள், ஆர்.ஐ., சத்தியபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். * கடத்துார் பேரூராட்சியில் நேற்று, 9 முதல், 15 வார்டுகளுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் விஜய்சங்கர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் மணி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில், 1,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சின்னா, தனி தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ