மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
12 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
12 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இதில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. காப்புக்காடுகளிலும், அதற்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையிலான ஈர நிலங்கள், நீர்நிலைகளில் பல வகை பறவை இனங்கள் தங்கியும், அவ்வப்போது வந்து செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை, எப்பகுதியில் எவ்வகையான பறவை இனங்கள் வாழ்கின்றன என்பது போன்ற தகவல்களை கணக்கெடுத்து, அரிய வகை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பென்னாகரம் வனப் பகுதியில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஜன., 27, 28 தேதிகளில் மாவட்ட வன அலுவலர் அப்பல்லா நாயுடு உத்தரவின் படி, பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில், பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடியூர் ஏரி, எட்டியாம்பட்டி ஏரி, மூங்கில் மடுவு மற்றும் ஒகேனக்கல் ஆற்று படுகை ஆகிய பகுதிகளில், நடத்தப்பட்டது. இதில், புதிதாக வந்துள்ள பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கை கண்டறியப்பட்டதில், நீர்பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது.இதில், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண் ஆசிரியர் கிருஷ்ணன், வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்கள் மற்றும் வனவர்கள் சக்திவேல், கணேஷ், புகழேந்திரன், வனக்காப்பாளர்கள், செல்வகுமார், பழனிசாமி மற்றும் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025