உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்

ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்

தர்மபுரி, ''தி.மு.க., ஊழல் ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவதே என் நோக்கம்,'' என, தர்மபுரியில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.தர்மபுரி மாவட்ட, பா.ம.க., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம், தர்மபுரி அடுத்த ஆட்டுகாரம்பட்டியில் நடந்தது. காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:எனக்கு எவ்வளவு தோல்வி, சோர்வு இருந்தாலும் தர்மபுரி வந்தாலே எனக்கு தெம்பு வந்து விடும். தர்மபுரி வீரம் நிறைந்த மண். இந்த கட்சிக்காக ராமதாஸ் அளித்த, 45 ஆண்டுகால உழைப்பு சாதாரணமானது இல்லை. பேச நிறைய விஷயங்கள் இருந்தும் அனைத்தையும் மனதுக்குள் அடக்கி வைத்துள்ளேன். தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, தி.மு.க., அரசு, ஏதோ ஒன்றின் மீது, மழை பெய்தது போல உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை போல, வரவிருக்கும் தேர்தலிலும், தர்மபுரி மாவட்டத்தின் ஒரு தொகுதிகளில் கூட, தி.மு.க., வெற்றி பெறாது. என் நடைபயணத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை, 25-ல் முருகனை வணங்கி தொடங்குகிறேன். நவ., 1-ல் தர்மபுரி மாவட்டத்தில் நிறைவு செய்ய உள்ளேன். இது உரிமை மீட்பு பயணம். என்னுடைய நோக்கம் ஊழல், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே. தி.மு.க.,-வை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.பா.ம.க., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ.,வும் மேற்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை