அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ., மழை பதிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நேற்று காலை நிலவ-ரப்படி, 503 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, பெய்த மழையளவு வருமாறு: ஊத்-தங்கரை - 503 மி.மீ., போச்சம்பள்ளி - 250, பாம்பாறு அணை - 205, பாரூர் - 200.20, பெனுகொண்டாபுரம் - 189.20, நெடுங்கல் - 140.20, கிருஷ்ணகிரி - 108.20, கே.ஆர்.பி. அணை - 98.80, தேன்க-னிக்கோட்டை - 80, தளி - 40, கெலவரப்பள்ளி அணை - 30, ஓசூர் - 29.50, ராயக்கோட்டை - 26, சூளகிரி - 22, சின்னாறு அணை - 20, அஞ்செட்டி - 10.60 மி.மீ., என, மாவட்டம் முழு-வதும் மொத்தம், 1,952.70 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 503 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.