உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

தர்மபுரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரிக்கு வர உள்ள நிலையில், அவர் பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணியை, அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.'மக்களுடன் முதல்வர் திட்டம்' ஊரக பகுதிகளில் துவக்கி வைத்தல் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி அடுத்த பாளையம்புதுாருக்கு வரும், 11ம் தேதி வர உள்ளார். இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த, 3 ஆண்டுகளில், 3 முறை தர்மபுரிக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்துள்ளார். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலைவாழ் மக்களின், 50 ஆண்டுகால கோரிக்கையான பஸ் வசதி, அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் அமைத்தல் உள்-ளிட்ட பல்வேறு பணிகளை அவர் துவக்கி வைத்துள்ளார்.இந்நிலையில் வரும், 11 அன்று ஊரக பகுதிகளில் வாழும் மக்-களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், தர்மபுரி அடுத்த பாளையம்புதுார் அருகே, மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். விழாவில், முடிவுற்ற பல்வேறு திட்டப்-பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-களை வழங்குகிறார். புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், புதிய திட்டங்-களை அறிவிக்க உள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை