உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீர்த்தகிரீஸ்வரர் தேரோட்டம் மார்ச் 1ல் உள்ளூர் விடுமுறை

தீர்த்தகிரீஸ்வரர் தேரோட்டம் மார்ச் 1ல் உள்ளூர் விடுமுறை

ரூர்:அரூரில் உள்ள, தீர்த்தகிரீஸ்வரர் கோவிவின் தேரோட்ட திருவிழாவையொட்டி, வரும் மார்ச், 1ம் தேதி அரூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் சாந்தி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் மாசிமக தேரோட்ட விழா, நாளை மறுநாள் மார்ச், 1ல் நடக்கிறது. எனவே, அன்றைய தினம் அரூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டவாறு நடக்கும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த, உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மார்ச், 16ம் தேதியான சனிக்கிழமை, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்