உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவில் முன் மரம் வெட்டிய விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு

கோவில் முன் மரம் வெட்டிய விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு

தர்மபுரி: தர்மபுரி டவுன், சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலை பாரதிபுரத்தில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவில் முன்பிருந்த அரச மரம் நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு, மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது. இது குறித்து, உரிய நடவடிக்கை கோரி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதன்குமார் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று முன்தினம் காலை கோவில் முன் கூடிய பக்தர்கள், மரத்தை வெட்டியதற்கு கோவில் அருகிலுள்ள பல் மருத்துவமனை உரிமையாளர் தான் முக்கிய காரணம் என குற்றம் சாட்டினர். மேலும், நடவடிக்கை கோரி பக்தர்கள் சார்பில், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, தர்மபுரி டவுன் போலீசார், கோவில் மற்றும் அருகிலுள்ள பல் மருத்துவமனை பகுதியில், தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி