உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இருவேறு விபத்தில் இருவர் சாவு

இருவேறு விபத்தில் இருவர் சாவு

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே, மாக்கன்கொட்டாயை சேர்ந்தவர்கள், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் நவீன், 14, மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக்ரோஷன், 11. இவர்கள் இருவரும் டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று காலை, 8:00 மணிக்கு ராஜாகொல்லஹள்ளி அருகே சென்றனர். நவீன் ஓட்டினார். அப்போது, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி-யதில், நவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம-டைந்த ரித்திக்ரோஷனை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* ஏரியூர் அருகே உள்ள காமராஜ்பேட்டையை சேர்ந்தவர் முருகன், 40. இவரது மனைவி கலை. இவர்களுக்கு, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி-யளவில், தர்மபுரியிலிருந்து தன் பஜாஜ் பல்சர் பைக்கில் ஏரியூர் நோக்கி சென்றார். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பிரிவு சாலையில், டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை