மேலும் செய்திகள்
புதிய மின்வாரிய அலுவலகம் கட்டப்படுவது எப்போது
29-Jun-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகத்திற்கு முதியோர் உதவித்தொகை, ஜாதிச்சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, தினமும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் அமர வசதியாக, கடந்த, 2013ல் அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், பல லட்சம் ரூபாய் செலவில், காத்திருப்பு அறை கட்டப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில் பின் மூடப்பட்டது. தொடர்ந்து, கட்டடம் சேதமடைந்ததால் சீரமைக்கப்பட்டது. அதன்பின் பல ஆண்டுகளாக காத்திருப்பு அறையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்த நிலையில், திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், தாலுகா அலுவலகம் வருவோர், காத்திருப்பு அறையை பயன்படுத்த முடியாமல், வளாகத்திலுள்ள மரங்களின் கீழ் காத்திருக்கின்றனர். எனவே, பூட்டிக் கிடக்கும் காத்திருப்பு அறையை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி கடந்த, ஜூன், 25ல் நம், 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது.இதையடுத்து, காத்திருப்பு அறையை சுற்றி வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு, துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, நேற்று முதல் காத்திருப்பு அறை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
29-Jun-2025