உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடிப்பெருக்கை முன்னிட்டு தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு

அரூர், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வருவர்.ஆற்றில் புனித நீராடிவிட்டு அங்குள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். அதே போல், இருமத்துார் தென்பெண்ணையாற்றிலும் ஆடிப்பெருக்கு விழாவின் போது பக்தர்கள் நீராடுவது வழக்கம்.இந்நிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என, பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ